‘காந்தாரா’ திரைப்படத்தை பார்த்த நடிகை திரிஷா அப்படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.

சூப்பர் ஹிட் படம்

கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னட திரைப்படம் ‘காந்தாரா’. சமீபத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த மாதம் 15-ம் தேதி வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

“ப்ப்ப்ப்ப்ப்பா”

அந்த வகையில் நடிகை திரிஷா ‘காந்தாரா’ படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வராஹரூபம்’ பாடல் காட்சியைப் பதிவு செய்து “ப்ப்ப்ப்ப்ப்பா” தலை வணங்குகிறேன் என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here