தமிழக – கேரள எல்லைப் பகுதியில் திடீரென அரசு பேருந்துகள் உள்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறிவிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. இதனால் வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள எல்லைக்குள் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் ஆகியவை இருக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது.

எதிர்ப்பு

மத்திய அரசு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து கண்டித்து காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான கேரள காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இதிடீரென இன்று போராட்டம் நடத்துகின்றன. இதன்காரணமாக இரு மாநில எல்லைப்பகுதியில் அரசு பேருந்துகாள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன.

ஆனால் அதே நேரத்தில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here