இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என நடிகை பூஜிதா பொன்னாடா திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சூப்பர் ஹிட் பாடல்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

ரகசிய திருமணம்?

இதனிடையே தேவி ஸ்ரீ பிரசாத் நடிகை பூஜிதா பொன்னாடாவை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள நடிகை பூஜிதா பொன்னாடா, இதுதொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “நானும் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரவி வரும் தகவல் உண்மை இல்லை. இதுபோன்ற தகவல்கள் எப்படி பரவுகிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் யாரையும் காதலிக்கவில்லை. இவ்வாறு நடிகை பூஜிதா தனது வருத்தத்தை தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here