கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை, கொள்ளை வழக்கு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூரை கொலை செய்த மர்ம நபர்களால், அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை திருடிச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் இந்த வழக்கில் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் கைதானவர்கள், சாட்சிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.

தீவிர விசாரணை

இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மன்னார்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர். கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்துகின்றனர். குணசேகரன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறிது காலம் கார் ஓட்டுநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here