இயக்குனர் விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் இரு தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்காக சென்றார். அங்கு  நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் செருப்பு அணிந்த காலுடன் புகைப்படம் எடுத்துள்ளனர். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள விக்னேஷ் சிவன், தங்கள் திருமணத்தை முடித்த கையோடு வீட்டிற்கு செல்லாமல் சாமி கல்யாணத்தை பார்க்கவும், நாங்கள் மிகுந்த பக்தி கொண்ட பாலாஜியின் ஆசிர்வாதத்தைப் பெறவும் நேரடியாக திருப்பதிக்குச் சென்றோம். இந்த நாள் தங்கள் நியாபகமாக இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலுக்கு வெளியே புகைப்படம் எடுத்து அதை எங்கள் விருப்பப்படி இங்கே திருமணம் முடிந்துவிட்டது என்று உணர்வை பெற விரும்பினோம். ஆனால் கூட்டம் காரணமாக நாங்கள் வளாகத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. பின்னர் சலசலப்பு குறைந்த நேரத்தில் உள்ளே நுழைந்து விரைந்து படம் எடுக்கும் அவசரத்தில், எங்கள் காலணிகளை அணிந்திருந்ததை உணரவில்லை எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here