தனியார் விமான ஊழியர் ஒருவர் தன்னிடம் முறை தவறாக நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார். ‘புட்ட பொம்மா’ பாடல் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில், இன்டிகோ விமானத்தில் தனக்கு நேர்ந்த தொல்லை குறித்து பூஜா டுவீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “மும்பையிலிருந்து புறப்படும் தனியார் விமானத்தில் பயணித்தபோது, அதன் ஊழியர் விபுல் நகாஷே  தன்னிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது மிகவும் வருத்தமாக இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் முற்றிலும் திமிர்பிடித்த, அறிவற்ற மற்றும் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டார். பொதுவாக நான் இதுபோன்ற பிரச்சினைகளை பற்றி டுவீட் செய்வதில்லை. ஆனால் இது உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது”. இவ்வாறு பூஜா ஹெக்டே குறிப்பிட்டிருந்தார். பூஜா டுவீட்டுக்கு இன்டிகோ நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் “உங்களுக்கு நடந்த அனுபவத்திற்காக   மன்னிக்கவும். உங்களுடன் உடனடியாக தொடர்பு கொள்ள விரும்புகிறோம். எனவே உங்கள் PNR உடன் தொடர்பு எண்ணை  எங்களுக்கு அனுப்புவம்” என டுவீட் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here