மும்பையில் தண்டவாளத்தைக் கடந்தபோது 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் மோதி இருசக்கர வாகனம் சுக்கு நூறாக சிதறும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ரஞ்சித் தேஷ்பாண்டே என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்றார். அப்போது அதிக வேகமாக வந்த ரயிலைப் பார்த்தவுடன் தனது வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றார். அந்த நொடியிலேயே சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த ரயில் இருசக்கர வாகனத்தின் பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருசக்கர வாகனம் சுக்குநூறாக உடைந்து சிதறும் வீடியோ காட்சி வெளியாகி, தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்திருக்கும்பட்சத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ள ரயில்வே போலீஸார், ரஞ்சித் தேஷ்பாண்டே மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here