மக்கள் மனம் கவர்ந்த ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி அன்று விமல் நடித்த துப்பறியும் த்ரில்லர் சீரிஸான ‘விலங்கு’ சிறப்பு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சி

தமது நேயர்களுக்கு எப்போதும் புதிய, சிந்திக்கத் தூண்டும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நோக்கமாகும். சர்வைவர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் மற்றும் சூப்பர் குயின் போன்று தடைகளை தகர்த்து வெல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள், நினைத்தாலே இனிக்கும், வித்யா நம்பர் 1, ரஜினி ஊக்கம் தரும் தொடர்கள், கர்ணன், தலைவி மற்றும் சித்திரை செவ்வானம் போன்ற திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்புவது என தமிழ் நேயர்கள் அனைவருக்கும் பல புதுமையான நிகழ்ச்சிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது.

கிரைம் தொடர்

இதுபோன்ற சுவாரஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகளின் பட்டியலில் புதிதாக ‘விலங்கு’ திரில்லர் சீரிஸை ஜீ தமிழ் சிறப்பு ஒளிபரப்பாக வெளியிடவுள்ளது. ‘குற்றம் புரிந்தது யார்’ என்பதை கண்டறியும் இந்த கிரைம் தொடர், Zee5 செயலியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த ஸ்பெஷல் பிரீமியர் வரும் பிப்ரவரி 20-ம் தேதி ஞாயிறன்று இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும்.

சுவாரஸ்யமான கதை

பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான ‘விலங்கு’ கிரைம் திரில்லரில், பிரபல நடிகர் விமல் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். காவல்துறையினரை திக்குமுக்காட வைக்கும் ஒரு மர்மம் நிறைந்த குற்றத்தை புரிந்தது யார் என்பதை கண்டறியும் பொறுப்பு விமல் வசம் வருகிறது. தமிழ் சினிமாவில் வழக்கமாக வரும் குற்றப்பின்னணி கொண்ட கிரைம் போலீஸ் கதைகள் போல இல்லாமல், ஒரு மாறுபட்ட கதை களத்தை இத்தொடர் கொண்டுள்ளது. ஒரு குற்ற வழக்கின் முடிச்சுகளை அவிழ்க்க நினைக்கும் நபர், விசாரணையின் ஒவ்வொரு நிலையிலும் என்னென்ன கஷ்டங்கள், தியாகங்கள் மற்றும் தோல்விகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த தொடர்  சுவாரஸ்யமாக கூறுகிறது. தத்ரூபமான கதாபாத்திரங்கள், பரபரப்பான காட்சிகள், காவல் அதிகாரியாக விமலின் அசத்தாலான நடிப்பு ஆகியவற்றுடன் ‘விலங்கு’ அவசியம் காணவேண்டிய ஒன்றாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here