கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

ஜெயலலலிதா மரண விவகாரம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எழுந்த சந்தேகம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்ததாக திமுக உறுப்பினர் சுதர்சனம் குறிப்பிட்டார். இதுதொடர்பாக பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், நீதிமன்றத்தில் உள்ள ஒரு விஷயத்தைப் பற்றி பேசுவது அவையின் மரபு அல்ல எனவே அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காரசார விவாதம்

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் சுதர்சனம் பேசினார் எனவும் அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்க தேவையில்லை எனவும் கூறினார். பின்னர் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதனைதொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்; மறைந்த முதலமைச்சர் கொடநாட்டில் இருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி? கடந்த 4 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் ஏன் கேமரா மாயமானது பற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொடநாடு விவகாரம் சாதாரணமான விஷயமல்ல. கொடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றம் சென்றீர்கள்? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார். பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொடநாடு எஸ்டேட் தனியார் சொத்து. ஜெயலலிதா மறைவுக்கு பின் அங்கு பாதுகாப்பு தரவில்லை. புலன் விசாரணை வேண்டாம் என  கூறவில்லை, வழக்கை நடத்துங்கள் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here