நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜோதிகா, கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பின் ‘மகளிர் மட்டும்’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’, ‘பொன்மகள் வந்தாள்’ என கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ‘உடன்பிறப்பே’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இணைந்த நடிகை ஜோதிகா, தற்போது முதன்முறையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். சுதந்திர தினத்தன்று இமயமலையில் 70 கிலோ மீட்டர் தூரம் டிரெக்கிங் சென்ற ஜோதிகா, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here