கொடநாடு கொலை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ர்ணா போராட்டம்

தமிழக சட்டப்பேரவை இன்று கூடியதும் கொடநாடு விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டசபைக்கு வெளியே எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமைர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியிலான எந்த தலையீடும் இல்லை என்றார். கொடநாடு கொலை வழக்கில் திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாகவும் கூறினார். கொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

அச்சப்பட தேவையில்லை

கொடநாடு கொலை வழக்கில் உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். எனவே வேறு யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here