நடிகை வனிதா விஜயகுமாரும், பவர் ஸ்டாரும் இணைந்து “பிக்கப் ட்ராப்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நடிகை வனிதா பேசியதாவது; பவர் ஸ்டாருடன் திருமணம் செய்துகொண்டது போல் வெளியிடப்பட்ட புகைப்படம், திரைப்படத்துக்கானது. ஆண்களுக்கு 4, 5 திருமணம் நடந்தால் கூட அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் பெண்களை பேசுகின்றனர். அதனால் தான் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன். 4 கல்யாணம் அல்ல, 40 கல்யாணம் கூட பண்ணுவேன். அது என் இஷ்டம். இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here