விபத்தில் தனது தோழி உயிரிழந்தது யாஷிகாவுக்கு தெரியாது என அவரது தாயார் உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

உரிமம் ரத்து

கடந்த சனிக்கிழமையன்று நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச் சென்ற கார் மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கியது. இதில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவும், அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரின் ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.

யாஷிகாவுக்கு தெரியாது

இந்த நிலையில், விபத்தில் தனது தோழி உயிரிழந்தது யாஷிகாவுக்கு தெரியாது என அவரது தாயார் சோனல் ஆனந்த் கூறியுள்ளார். பவணி குறித்து யாஷிகா நலம் விசாரித்தபோது, வெண்டிலேட்டரில் வைத்திருப்பதாக சொல்லியிருப்பதாக சோனல் தெரிவித்துள்ளார். யாஷிகாவுக்கு கால், இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறினார். சிகிச்சைக்கு பின் 3 மாதங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் 2 மாதம் கழித்து தான் அவரால் நடக்க முடியும் என மருத்துவர்கள் சொல்லியிருப்பதாகவும் யாஷிகாவின் தாயார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here