பாலிவுட்டில் போதைப் பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை தீபிகா படுகோனே மேலாளருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கும் நடிகைகள்

போதைப்பொருள் பிரச்சனை தற்போது சினிமா உலகையே புரட்டிப் போட்டு வருகிறது. சுஷாந்த் மரண வழக்கு, தற்போது திசை மாறி போதைப்பொருள் சர்ச்சையில் சென்று நிற்கின்றது. இதுதொடர்பாக சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பல முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப் பொருள் பயன்படுத்துவதாக தகவல் வெளிவந்ததை தொடர்ந்து, சாரா அலி கான், ஷர்தா கபூர் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சமீபத்தில் வெளிவந்து இருக்கும் தகவலின்படி, 2017 ஆம் ஆண்டில் K என்ற நபரிடம் D என்ற சினிமா பிரபலம் “மால் “இருக்கிறதா என்று கேட்ட வாட்ஸ்-அப் மெசேஜ்கள் கண்டறியப்பட்டன. அது, D என்றால் தீபிகா படுகோனே என்றும் K என்றால் அவரது மேனேஜர் கரிஷ்மா பிரகாஷ் என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் போதைப்பொருள் விவகாரத்தைப் பற்றி உரையாடி இருப்பது பாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தீபிகா கைதாவாரா?

நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜரான கரிஷ்மா பிரகாஷ் மற்றும் டேலண்ட் மேனேஜ்மென்ட் ஏஜென்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சித்கோ பேக்கர் ஆகிய இருவருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு NCB அதிகாரிகள் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பாக நடிகை தீபிகா படுகோனே எந்த தகவலையும் வெளியிடாததால், அவர்மீது குற்றம் இருக்குமா?அல்லது இருக்காதா? என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் போதைப் பொருள் வழக்கில் சிக்கும் அனைவரையும் அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்து வரும் நிலையில், தீபிகா படுகோனேவும் இதில் சிக்குவாரா என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர்.

கலக்கத்தில் பிரபலங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள் பார்ட்டி ஒன்றில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ பலரால் பகிரப்பட்டது. அதனடிப்படையில், அந்த பார்ட்டி நடத்தப்பட்ட பாரில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. இதனிடையே, பாலிவுட் நடிகர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்ததாக அன்குஷ் மற்றும் அனுஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னணி நடிகையான தியா மிர்சா பெயர் வெளிவந்துள்ளது. ஆனால் போதைப் பொருள் விவகாரத்திற்கும், தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இது முற்றிலும் திட்டமிட்டு, தனது வளர்ச்சியை கெடுக்கும் நோக்கில் பரபரப்பட்டு வரும் பொய்யான செய்தி. நான் ஒருபோதும் போதைப் பொருள் தொடர்பான விஷயங்களை பயன்படுத்தியதே இல்லை. சட்டப்படி இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறேன். இவ்வாறு தியா கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரியா சக்ரபோர்த்தி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுப்டி செய்த நீதிமன்றம், அவரை அக்., 6 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. சம்மன், கைது, சிறை என போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூம் எடுத்திருக்கும் நிலையைப் பார்த்தால், விரைவில் மொத்த பாலிவுட்டும் சிக்கிடும் போல என்று நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here