தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தம் 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, லட்சக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல் திரைப் பிரபலங்கள் பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையாற்றினர். நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், சிவகார்த்திகேயன், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட திரையுலகினர் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார்.












































