குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும் என நடிகர் சிவக்குமார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமுள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் லர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

கடையை மூடணும்

அந்த வகையில், நடிகர் சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் சென்னை தியாகராய நகரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; “யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடணும். குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும். கோடி கோடியாக தங்கள் குடும்பத்தோடு சொத்து குவிக்காமல் பொதுமக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும். அதேபோல இலவச திட்டங்களும் கொண்டு வரணும்”. இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here