விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ்’ சீசன் 4 நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசன்களையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து நடிகர் கமல்ஹாசன் அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள்? யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வேல்முருகன் பங்கேற்பு?

வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. கேப்ரில்லா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனு மோகன், விஜே அர்ச்சனா, கிரண் ரத்தோர் போன்றோரின் பெயர்கள் பிக் பாஸ் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. போட்டியாளர்கள் அனைவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் போட்டியாளராக கலந்துகொள்ளப் போவதாக கூறப்படுகிறது. ’சுப்பிரமணியபுரம்’, ’நாடோடிகள்’, ’ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களில் வேல்முருகன் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here