சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.39,320க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2வது நாளாக விலை குறைவு

செப்டம்பர் மாத தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சற்று ஆறுதலாக நேற்று விலை குறைந்தது. இந்நிலையில் 2வது நாளாக இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.4,880க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், நேற்று ரூ.39,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ.280 குறைந்து 39,040 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.5,126க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு சவரன் ரூ.280 குறைந்து 41,008 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலையில் மாற்றம்

வெள்ளி விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.68.80 விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.65.40 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here