காதலித்தை பெண்ணை கரம்பிடித்த நடிகர் ஆரவ் தனது திருமண விழாவில் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் கதாநாயகனார். தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆரவ்வுக்கு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும், ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்களும், பிக் பாஸ் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

குத்தாட்டம்

இந்நிலையில், தனது திருமண விழாவில் நடைபெற்ற நடன நிகழ்வில், நடிகர் ஆரவ் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here