நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுத்தர மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இறப்பு விகிதம் குறைவு

திருவண்ணாமலை சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கொரோனா தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், சிறு குறு வியாபாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழகத்தில் தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளது என்றார். அதிக பரிசோதனை செய்வதால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், போதிய மருத்துவ கருவிகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறினார். பெருந்தொற்று பரவல் கட்டுப்படுத்தி, படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டரீதியான நடவடிக்கை

நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க மாட்டோம் எனக் கூறிய முதலமைச்சர், கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தது தமிழக அரசு தான் என்றார். இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முறைகேடு செய்தவர்களிடம் பணத்தை அதிகாரிகள் திரும்பப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here