“தமிழ் தெரியாது போடா” என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அவமதிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன் திமுக எம்.பி. கனிமொழி இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறனும் இதே குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதேபோல இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்லலாம் என்று ஆயூஷ் அமைச்சக செயலாளர் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்திக்கு திணிப்புக்கு எதிராக பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், I am a தமிழ் பேசும் indian என்ற வாசகம் இடம்பெற்றுள்ள டி-சர்ட் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அவருடன் அருகில் இருக்கும் நடிகர் மெட்ரோ ஹீரோ ஷிரிஷ், இந்தி தெரியாது poda என்ற டி-சர்ட்டை அணிந்திருக்கிறார். இதேபோல் நடிகர் சாந்தனு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்திக்கு திணிப்புக்கு எதிராக பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றுள்ள டி-சர்ட்டை அணிந்த புகைப்படத்தை பகிர்ந்தனர். மேலும், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டாக்கும் டுவிட்டரில் டிரெண்டானது.

நெட்டிசன்ஸ் கிண்டல்

“ஹிந்தி தெரியாது போடா” என்ற வாசகமும், அந்த வாசகம் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டும் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாப்பிக்கான நிலையில், இளம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம் அந்த டி-ஷர்ட்டை அணிந்து சகோதரருடம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை பார்த்த நெட்டிசன்ஸ், “உண்மையிலேயே உங்களுக்கு ஹிந்தி தெரியாதா? என கேள்வி எழுப்பினர். இதைப் பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சில நிமிடங்களில் அந்தப் பதிவை டெலிட் செய்தார். இதனையடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் வரலாற்றை தோண்ட ஆரம்பித்த நெட்டிசன்ஸ், அவருக்கு ஹிந்தி நன்றாகவே தெரியும் என்றும் நம்ம கிட்ட நல்லா பொய் சொல்றாங்க எனவும் கூறினார். மேலும் அவர் நடித்த ஒரு ஹிந்தி படத்தின் புகைப்படத்தையும், அதற்காக அவர் கொடுத்த பேட்டியையும் பதிவிட்டார். இதைப் பார்த்த பலர் ஐஸ்வர்யா ராஜேஷை ட்ரோல் செய்தும், நக்கலடித்தும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here