‘ராஜா ராணி’ சீரியல் புகழ் ஆல்யா மானசா தற்போது புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குட்டிப்பொண்ணு ஆல்யா

17 வயதில் ஒரு மாடலாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஆல்யா மானசா, ரேடியோ ஜாக்கியாக பணிபுரிந்தார். 2015ஆம் ஆண்டு ‘மானாட மயிலாட சீசன் 10ல்’ பங்கேற்றார். பிறகு ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற விஜய் டிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்ற ஆல்யா, 2017 ஆம் ஆண்டு ‘ஜூலியும் நாலு பேரும்’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இத்தனை அறிமுகமும் அவருக்கு கைகொடுக்காத நிலையில், விஜய் டிவியின் ‘ராஜா ராணி’ என்ற சீரியல் அவரை அனைவருக்கும் பெருமளவு அறிமுகப்படுத்தியது. ஒரு வெகுளி பெண்ணாக நடித்து அனைவரின் மனதிலும் குடிகொண்டார் ஆல்யா மானசா. இவரது பெயர் கூட பலருக்கு தெரியாத சூழ்நிலையில், அவரின் கதாபாத்திரமான செம்பருத்தி என்ற பெயராலே அனைவராலும் அழைக்கப்பட்டார்.

புது சீரியல்

‘ராஜா ராணி’ தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சய் என்பவரை ஆல்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அழகிய பெண் குழந்தைக்கு தாயான ஆல்யா மானசா, குறையாத அழகுடன், கொஞ்சிப் பேசும் தமிழில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு சமயம் முழுவதும் தனது குழந்தையுடன் கழித்து வந்த ஆல்யா மானசா, தற்போது அடுத்த புரொஜெக்ட்க்கு ரெடியாகி இருக்கிறார். விஜய் டிவியில் தொடங்கவிருக்கும் ஒரு புதிய சீரியலில் ஆல்யா மானசா நடிக்க உள்ளார். அதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஒரு ஃபுல் ரீட் கொடுத்த அளவிற்கு சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here