சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் ‘வாழ்’ படத்தின் ‘ஆஹா’ என்ற பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வெற்றி நாயகன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும் தனது திறமைகளைக் காட்டி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ‘வாழ்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் ‘வாழ்’ படத்தின் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில், தற்போது அப்படத்தின் பாடல்கள் லிரிக்கல் வீடியோவாக வெளிவந்துள்ளது.

ரசிகர்களை கவர்ந்த பாடல்

‘வாழ்’ படத்தின் ‘ஆஹா’ என்ற பாடல் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பாதவது; “எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ‘வாழ்’ முதல் பாடல் ‘ஆஹா’. பிரதீப் விஜய் இசையமைத்து, பாடல் காட்சிகளை உருவாக்கியுள்ளார். இது உங்களுக்கு பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். ‘வாழ்’ படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் அழகாகவும், நேர்த்தியாகவும் இருப்பதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இயக்குநர் அருண் ராஜா காமராஜ் அறிமுகமான ‘கனா’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பால் உருவாகி வரும் ‘டாக்டர்’ திரைப்படத்தை அவரது சொந்த நிறுவனமே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here