‘பிக் பாஸ்’ 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட சாண்டி, ‘பிக் பாஸ்’ 4வது சீசன் குறித்து வெளியான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பிக் பாஸ்

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. ஜூன், ஜூலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி, இம்முறை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் அந்த திட்டத்தை தள்ளி வைத்தது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 4க்கான பணிகளை விஜய் டிவி நிர்வாகம் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை பெற்றது. போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

சீசன் 4ல் சாண்டி?

அதனைதொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4க்கான மற்றொரு புரொமோ வீடியோவை விஜய் டிவி நிர்வாகம் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. கொரோனா விழிப்புணர்வுடன் கூடிய அந்த வீடியோ அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த புரோமோவின் ஆரம்பத்தில் கமல் நடனம் ஆடியபடி வருவது அட்டகாசமாக இருந்தது. இந்நிலையில், இந்த வீடியோவில் கமலுக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தது, கடந்த சீசனில் போட்டியாளராக இருந்தவரும், முன்னணி நடன இயக்குனருமான சாண்டி என தெரிவந்துள்ளது. கமல்ஹாசனுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுக்கும் சாண்டி, அந்தப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாமிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here