சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரையில் ரூ.30 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம் விலை, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. தங்கத்தின் வரத்து குறைந்ததாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் தங்கம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட ரூ.43,000 வரை உயர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தை கண்ட தங்கம் விலை, மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

விலை குறைவு

இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.48 குறைந்து ரூ.4,916க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.39,328க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 குறைந்து ஒரு கிராம் ரூ.74.90க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி கிலோ ரூ1,800 ரூபாய் குறைந்து, ரூ.74,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here