தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி திண்டுக்கல் மாநகரின் பல பகுதிகளில் கல்லூரி மாணவர்களால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பொதுமக்களை ஆச்சரியமடையச் செய்துள்ளது.

குவியும் பாராட்டு

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வைத் தவிர அரியர் தேர்வு உட்பட அனைத்து செம்ஸ்டர் தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டது. இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மாணவர்கள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த வண்ணம் உள்ளனர். அண்மையில், திருச்சியை சேர்ந்த மாணவர் ஒருவர், தான் 23 பாடங்களில் அரியர் வைத்திருந்த நிலையில், முதலமைச்சரின் இந்த உத்தரவால் பட்டம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறி நன்றி தெரிவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

“மாணவர்களின் பாகுபலியே”

இந்த நிலையில், திண்டுக்கல் நகரின் பல பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. “மாணவர்களின் பாகுபலியே”, “அரியரை வென்ற அரசனே” போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த போஸ்டர்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மேலும் இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here