ரசிகர்களால் கொண்டாடப்படும் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாதம் 6ம் தேதி தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘பிக் பாஸ்’

மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாட்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் விதி. சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த செய்திகள் அதிகளவில் இடம்பெறுவதால், இதில் இடம்பெறும் போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்து வருகின்றனர்.

செப்., 6 முதல் ஒளிபரப்பு

தமிழ் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன், கமல்ஹாசன் நடித்த இந்நிகழ்ச்சி தொடர்பான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 4 செப்டம்பர் 6ம் தேதி முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்குகிறார். இதற்காக 16 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ஹைதராபாத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக திங்கள் முதல் படப்பிடிப்பில் பங்கேற்கப் போவதாக நடிகர் நாகார்ஜூனா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here