மியூசிக் ஆல்பத்தில் நடித்ததன் மூலம் தனது நனவாகியுள்ளதாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

ஏராளமான ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமானவர் தர்ஷன். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியால், தர்ஷன் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகு கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் வெளியானது. 

மியூசிக் ஆல்பம்

இந்த நிலையில், தற்போது தர்ஷன் ஒரு மியூசிக் ஆல்பத்தின் நடித்துள்ளார். ‘தாய்க்கு பின் தாரம்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த மியூசிக் ஆல்பத்தின் தர்ஷனுடன் சீரியல் நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்த மியூசிக் ஆல்பத்தின் டீசர் இன்று வெளியாக உள்ளது. இந்த ஆல்பத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு நனவாகியுள்ளது என்று தர்ஷன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here