பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கை விசாரிப்பதற்காக சிபிஐ அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறையும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது.

மும்பையில் முகாமிட்ட சிபிஐ

சுஷாந்த் வழக்கை இதுவரை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது. இவர்கள் பத்து நாட்கள் மும்பையில் தங்கியிருந்து சுஷாந்த் வழக்கை விசாரிக்க உள்ளனர். பல ஆதாரங்கள் ரியாவிற்கு எதிராக இருப்பதால் அவர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் சைப் அலி கானின் மகளான சாரா அலி கான், சுஷாந்த்தை காதலித்ததாக செய்திகள் வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக சாராவிடமும் விசாரிக்க வேண்டும் என்று பல தரப்பிலும் குரல்கள் எழுந்து வருகின்றது. சுஷாந்த் மீது சாரா உண்மையான காதலில் இருந்ததாகவும், சாரா பிரிந்தவுடன் சுஷாந்த் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். சுஷாந்த் மரணத்தில் நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடிபடுவதால், சினிமா பின்புலம் உள்ளவர்களை பாலிவுட் ரசிகர்கள் வெறுத்து வருகின்றனர். சுஷாந்த் மரணம் தொடர்பாக விரைவில் நீதி கிடைக்கும் என அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here