நுரையீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், தனக்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

புற்றுநோயால் அவதி

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கடந்த 9ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பெற்ற சிகிச்சையின் போது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் புற்றுநோயில் மூன்றாம் கட்ட நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். அதனால் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சமீபத்தில் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திடீரென்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சஞ்சய் தத்.

ரசிகர்களிடம் வேன்டுகோள்

மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக தனது வீட்டிற்கு வெளியே நின்று ரசிகர்களிடம் தனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று அவர் உருக்கமாக கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் பதிவிட்டுள்ள பதிவுகள், அவரது புகைப்படங்களை தற்போது வைரலாகி வருகிறது. சஞ்சய் தத்தின் முதல் மனைவியும், அவரது தாயும் புற்றுநோயால் மரணம் அடைந்ததைதொடர்ந்து, அவரது குடும்பத்தில் புற்றுநோய் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. கொரோனா லாக்டவுன் காரணமாக துபாயில் இருந்த சஞ்சய் தத்தின் மனைவி, சமீபத்தில் மும்பை திரும்பினார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டதால், சஞ்சய் தத்துடன் மருத்துவமனையில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் சுற்றிச்சுற்றி வரும் இந்த புற்றுநோய், பல முன்னணி நடிகர்களை பழிவாங்கி இருப்பதனால் நடிகர் சஞ்சய் தத் இதிலிருந்து பூரண குணமடைய அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here