விஜய், சூர்யாவை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தை விமர்சித்திருக்கும் மீரா மிதுனை அவரது ரசிகர்கள் கடுமையாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் கமல்ஹாசனை சாடிய மீரா, திரிஷா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டினார். பின்னர் நடிகர்கள் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி சர்ச்சையை உருவாக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் சூர்யாவும், விஜய்யும் பற்றி மீரா மிதுன் பேசியதற்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மீரா மிதுன் கொலை மிரட்டல் விடுப்பதாக நடிகை ஷாலு ஷம்மு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக்த்தில் புகார் அளித்துள்ளார்.

ரஜினி குறித்து விமர்சனம்

இவ்வளவு நடந்தும் மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சையான வகையில் டுவிட்டரில் பதிவுகளை போட்டு வருகிறார். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை டார்கெட் செய்து ஒரு டுவிட்டை பதிவு செய்து இருக்கிறார் மீரா மிதுன். ரஜினிகாந்த் 45 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்து இருப்பதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #45YearsOfSuperStarRajini என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதில் பதிவிட்டு வருகிறார்கள். அதை குறிப்பிட்டு மீரா மிதுன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு பஸ் கண்டக்டராக இருந்த ஒருவர் வெற்றி பெற்ற நடிகராக வளர்ந்து இருப்பது சிறந்த விஷயம் தான். ஆனால் அவரது அரசியல் லட்சியம் மற்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்கிற அவரது கனவு எப்போதும் கனவாகவே இருக்கும்” என டுவிட் செய்து இருக்கிறார். மீரா மிதுனின் இந்த டுவிட்டைப் பார்த்து கோபமான ரஜினி ரசிகர்கள், அவரை கமெண்டுகளில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here