தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தான் எப்போதும் முதலமைச்சர் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

ஒன்று கூடி முடிவு

மதுரை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி அதிமுக நிர்வாகிகள் புயல் வேகத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி – துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் தேர்தல் பணியாற்றி வருவதாகவும், அதிமுகவை இரு தலைவர்கள் வழிநடத்துவதால், தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூடி, யாரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அவரே அடுத்த முதல்வர் என்றும் தெரிவித்திருந்தார்.

மாற்று கருத்து

இந்நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு மாறுபட்டு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடியார் என்றும் முதல்வர்!. இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிறுத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் – ஈபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி இருந்த நிலையில், அவரது கருத்துக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாற்று கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here