தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு விடுத்த சவாலை செய்து முடித்த நடிகர் விஜய் அதுதொடர்பான புகைப்படங்களை வெளியிட்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இணையத்தள விளையாட்டு

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருக்கும் நடிகர் – நடிகைகள் அனைவரும், சமூக வலைத்தளத்தின் மூலமாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் பல சவால்களில் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர். யாராவது தனக்கு விடும் சவாலை செய்து முடித்து புகைப்படமாகவோ அல்லது சிறிய வீடியோவாகவோ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, அந்த சங்கிலியில் மற்றவரை இணைக்க வேண்டும். டேக் செய்த நபர் அந்த சவாலை ஏற்று மறுபடியும் வேறொருவரை அந்த போட்டியில் இணைக்க வேண்டும். இது மாதிரியான விளையாட்டுகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் மிகவும் டிரெண்ட்டாகவே இருக்கின்றது. சமீபத்தில் வீட்டு வேலைகளை செய்யும் வீடியோக்களை வெளியிட்ட நடிகர் சிரஞ்சீவி, அந்த சவாலை நடிகர் ரஜினிகாந்த ஏற்குமாறு பதிவிட்டார். உச்ச நடிகர், நடிகைகள் அனைவரும் இந்த சவாலை ஏற்று செய்து வருகின்றனர்.

மகேஷ் பாபு சவால்

அந்த வகையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு, தனது பிறந்தநாளன்று வீட்டில் ஒரு சிறிய மரக்கன்றை நட்டு வைத்து, இந்த சவாலை பின் தொடருமாறு நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரை கேட்டுக் கொண்டார். எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் விஜய்யின் வரவுக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் அவரது ரசிகர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. இந்த நல்ல விஷயத்தை விஜய் கண்டிப்பாக ஏற்பார் ரசிகர்கள் கூறி வந்தனர். 

சொன்னதை செய்த விஜய்

இந்த நிலையில், போட்டியில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய். எப்பொழுதும் எதார்த்தமான பேச்சாலும், எதார்த்தமான உடையாலும் ரசிகர்களை மிகவும் கவரும் விஜய், தன் வீட்டு தோட்டத்தில் புல் தரையில் அமர்ந்து மரக்கன்றோடு போஸ் கொடுத்தது அனைத்து ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. எப்போது இணையதளம் பக்கம் வருவார் என்று ஏக்கத்தோடு காத்திருந்த ரசிகர்களுக்கு, இது ஒரு தனி சந்தோஷத்தையே கொடுத்து இருக்கின்றது. விஜ்ய்யின் இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், தலைவா.. தலைவா.. என்று லைக்ஸ்களையும், கமெண்ட்ஸ்களையும் அள்ளி குவிக்கின்றனர். விட்ட சவாலை கச்சிதமாக முடிப்பது தான் எங்கள் வேலை என்று விஜய் ரசிகர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கின்றனர். இதனிடையே தனது சவாலை ஏற்று முடித்த நடிகர் விஜய்க்கு, மகேஷ் பாபு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here