‘தேசிய கைத்தறி தினத்தை’ போற்றும் வகையில் நமது ஹீரோயின்கள் பலர் புடவையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு #Vocal4Handmade என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் ஆக்கினர்.

கவர்ச்சியில் கலக்கும் நாயகிகள்

எப்பொழுதும் மாடர்ன் உடைகளில் வலம் வரும் ஹீரோயின்கள், அவ்வபோது சேலையில் தோன்றி ரசிகர்களை கவர்வர். குட்டி குட்டி உடைகளைப் போட்டு நடித்தாலும், புடவை அணியும் பொழுது நடிகைகளுக்கு இருக்கும் அழகும், லட்சணமும் தனி ரகம் தான். புடவையில் இருக்கும் நடிகையின் புகைப்படங்கள் வைரலாகவே பகிரப்படும். அந்த வகையில் ‘தேசிய கைத்தறி தினத்தன்று நடிகைகள் வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்களால் பெருமளவு பகிரப்பட்டது. மிகவும் போல்டான கேரக்டர்களில் நடிக்கும் பெண்கள் கூட புடவையில் வெட்கமும், புன்னகையும் நிறைந்து காணப்படுவார்கள். அந்த மாதிரியான புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மயங்கியே போகின்றனர்.

புடவையில் நடிகைகள்

அதிகளவில் கவர்ச்சியை விரும்பும் பிரியங்கா சோப்ரா, புடவையில் தனி அழகாகவே காணப்பட்டார். பேன்ட் டி-ஷர்ட்டுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை டாப்ஸியும், தனது அழகான புகைப்படத்தை பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளி சென்றுள்ளார். உடல் ஆரோக்கியத்தைப் பற்றி பெருமளவு அக்கறை எடுத்துக்கொள்ளும் நடிகை ரகுல் பிரீத் சிங், கவர்ச்சி கலந்த புடவையில் காட்சி அளித்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்களும் “மரண மாஸ், செம்ம அழகு, உங்கள அடிச்சுக்க ஆளே கிடையாது” போன்ற கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நெசவு தொழில் என்பது சாதாரண விஷயமல்ல. உடல் வலிக்க வேலை செய்து கைத்தறி ஆடைகளை உருவாக்கும் நெசவாளர்களை எப்பொழுதுமே நாம் மதிக்கவேண்டும், ஆதரிக்க வேண்டும். இந்த தொழிலை விட்டுவிட்டு பலர் வெளியேறி வரும் அவலநிலை ஏற்பட்டு வருகிறது. கைத்தறி சேலைகளை பெண்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கினால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெருமளவு பெருகும் என்று ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

புடவை நெய்யும் ப்ரணிதா

பட்டு நெய்வது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ப்ரணிதா, கைத்தறி நெசவாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார். சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாமல் சீரியல் நடிகைகள் அவ்வப்போது புடவைகளில் காட்சியளித்து வருகின்றனர். அந்த வகையில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் பிரபலமான நடிகை ரட்சிதாவும் சேலை கட்டிய புடவையோடு, தனது புகைப்படத்தை வெளியிட்டு நெசவாளர்களுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார். நடிகைகள் வெளியிட்டுள்ள சேலை அணிந்த புகைப்படங்கள் அவர்களது ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here