தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திண்டுக்கல் சென்றார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.69 கோடியில் 42 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். 3,500 பயனாளிகளுக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.8.88 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

இருமொழிக் கொள்கை தொடரும்

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும் எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் கூறினார். திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான மருத்துவக் கல்லூரி விரைவில் அமைய உள்ளதாக கூறினார். கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைய உள்ளதாகவும், புதிய கலை அறிவியல் கல்லூரி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்த மாவட்டங்களில் கூடுதலாக ஒரு குழு என 2 குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ஓடி ஒளிந்து கொள்வார்

மேலும் அவர் பேசுகையில்; எஸ்.வி.சேகர் ஏதாவது பேசுவார்; வழக்கு என வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார். நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி. சேகர் பெரிய தலைவர் இல்லை. பாஜகவைவிட்டு நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் சேர்த்துக்கொள்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here