கதாநாயகனுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் போது கதாநாயகிக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதா என நடிகை அனுஷ்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

சூப்பரான அறிமுகம் 

‘சூப்பர்’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழிலும் முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார். ‘ரெண்டு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அவர், அப்படத்தில் பெருமளவு பேசப்படவில்லை. தனது முதல் படத்திலேயே தாராளக் கவர்ச்சியுடன் களமிறங்கிய நடிகை அனுஷ்காவிற்கு அப்படத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், என்னை அறிந்தால் போன்ற பல வெற்றிப் படங்கள் வரிசை கட்டி வந்தன. பிறகு பாகுபலி என்ற மிகப்பெரிய பிரம்மாண்டமான வெற்றியையும் கொடுத்தார். உயரமான, வாட்டசாட்டமான, கம்பீரமான நடையால் அப்படத்தில் அனைவரையும் ஈர்த்தார்.

அதிக சம்பளம்

இஞ்சி இடுப்பழகி என்ற படத்திற்காக பல மடங்கு தனது உடல் எடையை கூட்டிய நடிகை அனுஷ்கா, அதன்பிறகு உடல் எடையை குறைப்பதற்காக மிகவும் மெனக்கெட்டுக் கொண்டு இருக்கிறார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்துவிட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதுதொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையும் அனுஷ்காவிடம் இருந்து வரவில்லை. தற்போது அவர் எந்த படங்களில் நடித்தாலும், அப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளிலும் வெளியாவதால், ஒரு பெரிய தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார்.

வாக்குவாதம்

அனுஷ்காவை ஒரு புதிய தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. அந்த படத்தை இயக்கும் இயக்குநர் அனுஷ்காவை சந்தித்து கதை சொன்னார். அனுஷ்காவுக்கு கதை பிடித்துப் போக, அதில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். மேலும் 60 நாட்கள் கால்ஷீட்டுக்கு ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த சம்பளத்தை கொடுக்க இயக்குநர் தயங்கினார். தான் 3 மொழி படங்களிலும் ‘பிஸி’யாக நடித்துக் கொண்டிருப்பதாகவும், தன்னுடைய படங்கள் அனைத்து மொழிகளிலும் ‘டப்’ செய்யப்படுவதாகவும், எனவே ரூ.3 கோடி சம்பளத்தை தாராளமாக கொடுக்கலாம் என்றும் அனுஷ்கா கூறியிருக்கிறார். மேலும் அந்த புதிய படத்தின் கதாநாயகனுக்கு ரூ.10 கோடி சம்பளம் கொடுக்கும்போது, எனக்கு ரூ.3 கோடி தரக்கூடாதா?” என்றும் அவர் வாக்குவாதம் செய்துள்ளார். அதன்பிறகு அனுஷ்காவுக்கு ரூ.3 கோடி சம்பளம் கொடுக்க இயக்குநரும், தயாரிப்பாளரும் சம்மதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here