பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் அலுவலகத்தை பவன் கல்யாண் ரசிகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சை இயக்குனர்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் ராம் கோபால் வர்மா. இவர் மற்ற மொழிகளைவிட தெலுங்கில் அதிகளவில் படங்களை இயக்கி வந்தார். இவரது படங்கள் எப்போதும் வெளியானாலும் உடனே பிரச்சனையும் வருவது வழக்கம். சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி எதாவது ஒரு கருத்தை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவார். கொரோனா வைரஸ் காலகட்டத்தில் திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால், தனது ஆன்லைன் தியேட்டரில் படங்களை வெளியிட்டு வந்தார் வர்மா. ‘க்ளைமாக்ஸ்’, ‘நேக்டு என வரிசையாக 18+ படங்களாகவே வெளியிட்டு இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார். இதுபோன்ற படங்கள் மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும், அந்தப் படங்களை வெளியிடாதீர்கள் என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் அவர் சற்றும் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து தனது அடுத்த படத்தின் அப்டேட்டை வெளியிட்டார் ராம் கோபால் வர்மா. அப்படத்தின் படு கவர்ச்சியான புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், வர்மாவை ரவுண்டு கட்டி விமர்சித்து வருகின்றனர்.

பவர் ஸ்டார்

பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் அஜித் என்றே கருதப்படுகிறார். தல அஜித்துக்கு இங்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறர்களோ, அதேபோல் தெலுங்கிலும் பவன் கல்யாணுக்கு அவ்வளவு ரசிகர்கள் உள்ளனர். மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாண், எந்த துணையும் இல்லாமல் சினிமாவில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். ‘அக்கடா அம்மாயி இக்கடா அப்பாயி’ என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பவன், தனது நான்காவது படமான ‘தோல்லி பிரேமா’ என்ற படத்தில் நடித்தார். இது சிறந்த படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. இதனிடையே, ராம் கோபால் வர்மா ‘பவர் ஸ்டார்’ என்று ஒரு படத்தை இயக்கியுள்ளார். பவன் கல்யாணை தவறாக சித்தரித்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. பவன் கல்யாண், அவரது அரசியல் கட்சி, அரசியல் செயல்படுகளை அதிகம் விமர்சித்து அப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.

அடித்து நொறுக்கிய ரசிகர்கள்

இப்படம் பவன் கல்யாணை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது இல்லை என ராம் கோபால் வர்மா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் முழுக்க முழுக்க பவண் கல்யாண், அவரைச் சுற்றி உள்ளவர்கள், அவரின் அரசிலை சித்தரிக்கும் வகையில்தான் அதன் டிரெய்லரில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் சிலர், ராம் கோபால் வர்மா அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனை ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர். தற்போது இந்த பிரச்சனை டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here