‘பீட்டர் பாலுக்கு’ சொந்தமாக அலுவலகம் கூட கிடையாது என்றும் அவர் சொல்வது அனைத்துமே பொய் என்றும் அவரது நண்பர் பிரசாந்த் பிரபாகரன் போட்டுடைத்துள்ளார்.

திருமண சர்ச்சை

திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன நாள் முதல் நடிகை வனிதா பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். திரையுலகினர் முதல் பொதுமக்கள் வரை வனிதாவைப் பற்றி சமூக வலைத்தளங்களில் பேசத் தொடங்கிவிட்டனர். தனக்கு முறையாக விவாகரத்து அளிக்காமல் நடிகை வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக, பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வனிதாவின் திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவரும், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரும் விமர்சித்தனர். இதையடுத்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வனிதா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

பேட்டி கொடுத்த பீட்டர்

திருமணம் முடிந்ததில் இருந்து பீட்டர் பால் பேசவே இல்லை எனக் கூறப்பட்டு வந்த நிலையில், வனிதா தனது யூடியூப் சேனலில் பீட்டர் பாலை பேட்டி எடுத்துள்ளார். அதில் வனிதா கேட்கும் பல கேள்விகளுக்கு பீட்டர் பால் பதிலளித்தார். வனிதாவுடனான முதல் சந்திப்பு முதல் தற்போது வரை அனைத்தையும் மனம் திறந்து பேசினார் பீட்டர். தனது வாழ்வில் நடந்ததாக கூறப்படும் பல சோக நிகழ்வுகள் குறித்தும் அவர் பேசியுள்ளார். தான் குடித்ததற்கான காரணத்தையும் பீட்டர் பால் தெரிவித்தார். வனிதா – பீட்டர் பால் பேட்டி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது.

எல்லாமே பொய்!

இந்த நிலையில், பீட்டர் பேட்டி கொடுத்த அலுவலகம் தன்னுடையது என அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். ஆனால் அதில் உண்மையில்லை என அவரது நண்பர் பிரசாந்த் பிரபாகரன் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் நீண்டதொரு பதிவை வெளியிட்டுள்ள அவர், பீட்டர் பால் குறித்த பல்வேறு தகவல்களை கூறியிருக்கிறார். பீட்டர் பால் சொல்வது அனைத்தும் பொய் என்றும் அவருக்கு சொந்தமாக அலுவலகம் கூட கிடையாது எனவும் அவர் கூறியிருக்கிறார். பீட்டர் பால் டிஸ்னி படத்தில் வேலை செய்யவில்லை என்றும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here