கந்தசஷ்டி கவசம் பாடல் குறித்து சர்ச்சைக்குறிய வகையிலான கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சர்ச்சை கருத்து

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி பாடல் குறித்தும், இந்துக்கடவுள் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ பதிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கந்தசஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டுதோடு, சம்மந்தப்பட்ட வீடியோவையும் நீக்கியது. கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த யூ டியூப் சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட செந்தில் வாசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வலுக்கும் கண்டனம்

இதனிடையே, கந்தசஷ்டி கவச பாடல் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு திரையுலகினர் பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா, சௌந்தரராஜா, ராஜ்கிரண், மனோ பாலா, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here