நடிகை அமலா பால் கை கடிகார விளம்பரத்தில் நடித்திருக்கும் புகைப்படங்கள் இணைய தளங்களில் வைராலகி வருகின்றன.

சர்ச்சை நடிகை

எப்பொழுதும் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து அளித்து வரும் நடிகை அமலாபால், தற்போது வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்களை வேற லெவலில் மயக்கி உள்ளார். படங்களில் நாயகியாக வருகிறாரோ இல்லையோ, சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சிந்து சமவெளி என்ற தனது முதல் படத்திலேயே சர்ச்சையை ஆரம்பித்த இவர், இன்றும் அதற்கு குறைவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருக்கும் அமலா பால், முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேடங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில் ‘அம்மா கணக்கு’ என்ற திரைப்படமும் ‘ஆடை’ திரைப்படமும் பெருமளவு பேசப்பட்டது.

ஊரடங்கில் புதுமுயற்சி

ஊரடங்கு சமயத்தில் வீட்டிலிருந்தபடியே போட்டோ ஷூட் நடத்தி வரும் சில நடிகைள், விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்ப்பதிலும் கவனமாக இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபாலும் கைக்கடிகார விளம்பரத்திற்கு போஸ் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டாப்லெஸ் உடை அணிந்து படுக்கையில் கிளிட்டெரிங் சாண்டல்ஸ் அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் புகைப்படம் கைக்கடிகாரத்திற்கான விளம்பரமாக இருக்கிறதோ இல்லையோ, அவருக்கு நல்ல விளம்பரமாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

ஹிட் கொடுக்கும் கட்டாயம்

அமலா பாலின் நடிப்பில் உருவாகியுள்ள “அதோ அந்த பறவை போல” படத்தின் டிரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளும், திரில்லர் போன்ற காட்சிகளும் அனைவரையும் மிகப்பெரிய வியப்பிலும், எதிர்பார்ப்பிலும் ஆழ்த்தியுள்ளது. இப்படம் இவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமையும் என சினிமா ரசிகர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here