ஜூலை 23ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நடிகர் சூர்யாவிற்கு பிரம்மாண்டமான காமன் டிபியை வெளியிட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.

அர்ப்பணிக்கும் ரசிகர்கள் 

பொதுவாகவே ஹீரோக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இப்போது மட்டுமல்லாமல் சினிமா தொடர்ந்த காலம் முதலே ஒரு பிணைப்பு இருந்து கொண்டுதான் இருக்கின்றது. எம்ஜிஆர், சிவாஜி போன்ற மூத்த கலைஞர்களின் ரசிகர்களாக இருந்தாலும் சரி, இப்பொழுது டிரெண்டிங் ஆக இருக்கும் இளம் ஹீரோக்களாக இருந்தாலும் சரி, தனித்துவமான நடிப்பும், எதார்த்தமான பேச்சும், மனதைக்கவரும் கதாபாத்திரத்தில் நடித்தால் அவர்கள் சூப்பர் ஹிட் ஹீரோ தான். அவர்கள் பல தோல்வி படங்களை கொடுத்தாலும்கூட, அவர்களுக்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர் ரசிகர்கள். அந்தவகையில் தங்களுக்குப் பிடித்த நடிகரின் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி அவர்கள் சார்பில் ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர்.

 

மாஸ் காட்டும் தியேட்டர் 

தியேட்டர்களில் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படம் வெளிவந்தால் அதனை கூட்டம் கூட்டமாக சென்று பார்ப்பதும், போஸ்டர்களுக்கு பாலாபிஷேகம் செய்வதும், எவ்வளவு நீண்ட வரிசையாக இருந்தாலும் முதல் நாள் முதல் ஷோவில் படம் பார்க்க வேண்டும் என்று அவர்களின் அன்பு வெறித்தனமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றது. தங்களுக்கு பிடித்த நடிகரின் பிறந்தநாள் வந்துவிட்டால் போதும், அமலி துமலி செய்து அனைவரையும் வியக்க வைத்து விடுவார்கள். ஆனால் இந்த கொரோனா  ஊரடங்கு சமயத்தில் அனைத்தும் முடங்கியிருப்பதால், சமீபகாலமாக ஒரு  விஷயம் டிரெண்டாகவே இருக்கிறது. அது என்னவென்றால் காமன் டிபி வெளியிடுவது தான். ரசிகர்கள் அவர்கள் அன்பை தெரிவிப்பதற்காக காமன் டிபி என்ற ஒன்றை உருவாக்கி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வைரலாக செய்கின்றனர். ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் அதனை ஒரு நாள் முழுவதும் தங்களின் டிபி ஆக வைத்து மாஸ் காட்டி வருகின்றனர்.

சூப்பர் டிபி 

அந்த வகையில், நடிகர் சூர்யாவின் ரசிகர்களும் சமீபத்தில் காமன் டிபி ஒன்றை உருவாக்கியுள்ளனர். அது தற்போது சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி வெளிவந்திருக்கும் இந்த காமன் டிபி, பிரபலங்கள் பலரால் பகிரப்பட்டு வருகின்றது. இதில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், பாடலாசிரியர் என்று அனைவரும் ஷேர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டி .இமான், ஞானவேல் ராஜா, சிம்ரன், ஆர்யா, அதிதி ராவ், விக்னேஷ் சிவன், வெங்கட் பிரபு, மாதவன், கார்த்தி போன்ற பல முன்னணி சினிமா பிரபலங்களும் இவரின் காமன் டிபியை ஷேர் செய்து வருகின்றனர். நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் ஒரு செம விருந்தாக அமையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் #SuriyaBirthdayFestCDP என்ற hashtag 24 மணி நேரத்திற்குள் 70 லட்சதிற்கும் அதிகமான பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here