சமூக இடைவெளியுடன் திரைப்பட படப்பிடிப்புகளை நடத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம் என நடிகை மஞ்சிமா மோகன் கருத்து தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தும் கொரோனா

கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்டையே அச்சுறுத்தி வருவதால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அதனை விரிவுபடுத்தப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். இருந்தும் தமிழகம் முழுவதும் இப்பரவல் அதிகமாக இருப்பதால், அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தபடியே பணி செய்து வருகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி, OTTயில் திரைப்படங்கள் ரிலீஸ் என அனைத்து சூழ்நிலைகலும் மாறிக்கொண்டே இருக்கின்றது. இந்த ஊரடங்கு சிலருக்கு பழகிப் போனாலும், சிலர் மனரீதியாகவும், வருமான ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலை சந்தித்து வருகின்றனர்.

மன உளைச்சல்

இந்த கொடிய வைரஸின் பாதிப்பால் திரைப்படத்துறையை சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ஏதும் நடைபெறாததால், பல தொலைக்காட்சி சேனல்களில் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட சீரியல்கள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனால் வீட்டிலேயே இருக்கும் நடிகர், நடிகைகள் சமூக வலைத்தளங்களிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். சில நடிகர், நடிகைகள் தங்கள் பங்கிற்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அச்சத்தில் மஞ்சிமா

இந்த வகையில் தமிழில் “அச்சம் என்பது மடமையடா, சத்ரியன், இப்படை வெல்லும்” போன்ற படங்களில் நடித்த மஞ்சிமா மோகன், தனக்கு இருக்கும் கொரோனா பயத்தைப் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; “கொரோனா பரவல் இன்னும் அடங்கவில்லை. இந்த நேரத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதும், அவற்றில் நடிகர், நடிகைகள் பங்கேற்பதும் அவ்வளவு நல்லது அல்ல. இப்போது படப்பிடிப்புகளை நினைத்தே பார்க்க முடியாது. படப்பிடிப்புகளில் பங்கேற்க முடியாமல் இருப்பது எனக்கு வருத்தம்தான். படப்பிடிப்புக்கு போக வேண்டும் என்ற ஆசையும் எனக்கு அதிகமாக இருக்கிறது. ஆனால், இந்த கொரோனா மனதுக்குள் மிகவும் பயத்தை உண்டாக்கி இருக்கிறது. படப்பிடிப்பு அரங்கில் குறைந்தது 50 முதல் 60 பேர் வரை கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். அவ்வளவு பேரை வைத்துக்கொண்டு சமூக இடைவெளியோடு பணிகளை நடத்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். அதனால், படப்பிடிப்புகளை தொடங்க இன்னும் கொஞ்சம் காலம் ஆகும் என்றே நினைக்கின்றேன். இந்த ஊரடங்கில் இணையதளம் மூலமாக வீட்டு உள் அலங்காரம், மார்க்கெட்டிங் போன்றவற்றை கற்று வருகிறேன்.” இவ்வாறு மஞ்சிமா மோகன் கூறியிருக்கிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here