தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நயன்தாராவைப் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று பெரிதளவில் கொண்டாடப்பட்டு வரும் ஒரே நடிகை நயன்தாரா தான். தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் நயன்தாராவுக்கு, மிக அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பது ஒருபுறமென்றால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடித்து பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்று வருகிறார். தற்போது ரஜினியின் அண்ணாத்த, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை நயன்தாரா தன் கைவசம் வைத்திருக்கிறார். மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பிஸி நடிகை

நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தினை விக்னேஷ் சிவன் தயாரித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து அவர் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சமந்தா ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதுபற்றி இந்த வருடம் காதலர் தினத்தன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் இன்னும் துவங்கவில்லை. கொரோனா பிரச்சனை முடிந்து அரசு அனுமதி அளித்தால் வரும் ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் துவங்கப்படும் என தயாரிப்பாளர் தெரிவித்திருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங்கும் தற்போது கொரோனா முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷுட்டிங் இந்த வருடம் தொடங்க வாய்ப்பு இல்லை என சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதனால் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் மீண்டும் தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது.

இணையதள நயன்தாரா

இந்நிலையில் நயன்தாராவைப் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ஒருவரது வீடியோ, சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் இந்திய அரசு சீனாவின் 59 மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்தது. அதில் மிகவும் பிரபலமான டிக் டாக் செயலியும் ஒன்று. இந்த டிக் டாக்கில் வீடியோக்கள் செய்து பதிவிட்டு வரும் கேரளாவைச் சேர்ந்த மிதுவிகில் என்ற பெண்தான் நயன்தாரா போலவே இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அவர் நயன்தாரா நடித்த படங்களில் இடம்பெற்றுள்ள பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு டிக் டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதைப்பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாரா போலவே இருப்பதாக கமெண்ட் செய்கின்றனர்.

குவியும் பட வாய்ப்பு

முன்னணி நடிகைகள் போலவே இருக்கும் நபர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருக்கும் அம்ருதா என்ற பெண் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் போலவே இருக்கிறார் எனக்கூறி ஒரு வீடியோ இந்தியா முழுவதும் பரவியது. அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆன நிலையில், தற்போது மலையாள சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதுபோல டிக் டாக் உள்ளிட்ட பல செயலிகள் மூலமாக பல்வேறு நபர்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here