பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், அவர் தன்னிடம் ரூ. 1 கோடி பணம் கேட்டதாக நடிகை வனிதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பிரச்சனையே வாழ்க்கை

திரை நட்சத்திர ஜோடியான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியரின் மகள் நடிகை வனிதா. கடந்த 1995ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படம் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு மாணிக்கம் எனும் படத்தில் நடித்தார். ஏற்கனவே இரண்டு திருமணங்களை செய்து மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த வனிதா, மணவாழ்க்கை கசந்ததால் அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார்.

பீட்டருடன் திருமணம்

தனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்த நடிகை வனிதா, சிறிது காலம் பிள்ளைகளுடன் வாழ்க்கையை ஓட்டி வந்தார். இதனிடையே இயக்குநர் பீட்டர் பால் என்பவரது அறிமுகம் கிடைத்தபின் இருவரும் பழக ஆரம்பித்தனர். பின்னர் அது காதலாக மாறியதையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர். பீட்டர் பால் வந்த பிறகு தனது வாழ்வில் வசந்தம் வீசுவதாக வனிதா மெய்சிலிர்க்க கூறினார். தனது பிள்ளைகளின் சம்மதத்துடன், நேற்று கிறிஸ்துவ முறைப்படி பீட்டர் பாலை வனிதா திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கொரோனா ஊரடங்கு காரணமாக மிக எளிமையாக நடந்தது. காதலரை கரம் பிடித்த சிறிது நேரத்தில் அவருக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

போலீசில் புகார்

இந்த நிலையில், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் புகார் அளித்துள்ளார். அதில், பீட்டருடன் திருமணமாகி தனக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், முறையாக விவாகரத்து அளிக்காமல் வனிதாவை திருமணம் செய்ததாக கூறியுள்ளார். முறையாக விவாகரத்து அளித்த பிறகே, வனிதாவை திருமணம் செய்துகொள்வேன் என பீட்டர் பால் ஏற்கனவே கூறியதாகவும், அவர் அதை பின்பற்றாமல் வனிதாவை திருமணம் செய்ததாகவும் எலிசபெத் ஹெலன் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பீட்டர் பால் மனைவியின் புகாருக்கு நடிகை வனிதா பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக வனிதாவிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, இப்பிரச்சனை நான் எதிர்பார்த்தது தான். கடந்த 8 வருடங்களுக்கு முன்னரே பீட்டர் அவரை பிரிந்து விட்டார். நாங்கள் திருமணம் செய்வது அவருக்கு தெரியும். திருமண ஏற்பாடுகள் நடந்த போது அமைதியாக இருந்த எலிசபெத் ஹெலன், தற்போது புகார் அளிக்க காரணம் என்ன. பணம் பறிப்பதற்காக வேண்டும் என்றே இதுபோல செய்கிறார். ரூ. 1 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்கிறார். எலிசபெத்தின் புகாரை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு வனிதா கூறினார். மணவாழ்க்கையில் அடியெடுத்து வைத்த மறுநாளே மரண அடி போல் விழுந்திருக்கிறது பீட்டர் முதல் மனைவியின் புகார். இதில் இருந்து வனிதா எப்படி, எப்போது மீண்டு வருவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here