விசாரணை, அசுரனைத் தொடர்ந்து வாடிவாசல் என்ற நாவலைத் தழுவிப் படமாக்குகிறார் வெற்றிமாறன். ஜிவி குமார் இசையமைக்க கலைப்புலி தாணு இப்படத்தைத் தயாரிக்கிறார்.

வெற்றிமாறனின் ஆடுகளம்

ஆட்டோ சந்திரகுமாரின் லாக்கப், பூமணியின் வெக்கையை அடுத்து மீரான் மைதீன் எழுதிய அஜ்னபி, சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் ஆகிய நாவல்களைத் திரைப்படமாக்க இயக்குநர் வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். அதில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் பற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து ரசிகர்கள் ஃபேன்மேட் டீசர்கள், போஸ்டர்கள் எல்லாம் விட்டார்கள். சூர்யா டபுள் ஆக்டில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் எல்லாம் தள்ளிவைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், ரசிகர் ஒருவர் வெளியிட்ட புது ஃபேன்மேட் போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

கதைச் சுருக்கம்

பிச்சி என்ற இளைஞன் மச்சான் மருதனுடன் வாடிவாசலுக்கு வருகிறான். தன் அப்பா அம்புலியை கண்முன் குடை சாய்த்த காரி எனும் காளையை அடக்கியே தீரவேண்டும் என்பதுதான் அவனது ஒரே குறிக்கோள். ஒரு சுத்த வீரனை இனம் கண்ட பாட்டையா தன் அனுபவத்தை, காளைகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்களை சமயம் பார்த்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். காரி காளையைப் பார்க்கும்போதெல்லாம் பிச்சிக்கு அதன் கொம்பில் அவனது அப்பாவின் ரத்தம் ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை ஏற்படுகிறது. பிச்சி காரியை அடக்கினானா இல்லையா என்பதுதான் கதை. மருதனாகவும், பாட்டையாவாகவும், பண்ணையாராகவும் யார் நடிக்கப் போகிறார்கள் என்று இதுவரை தெரியவில்லை.

வெற்றிமாறன் – சூர்யா கூட்டணி

நாவலைத் தழுவின படமா இருந்தாலும் அவர் திரைக்கதையில் நடப்பு அரசியலோட வேறு ஒரு தொடர்பு இருக்கும். அசுரனில் சிவசாமியோட ஃப்ளேஷ்பேக்கில் வரும் சம்பவம் உண்மையா நடந்த கீழவெண்மணி படுகொலையோட தழுவல். நாவலில் அது இல்லை. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் வெளியான ஜல்லிக்கட்டு படத்தில் மனிதனுக்குள் இருக்கும் மிருகத் தன்மையும், மிருகத்திற்குள் இருக்கும் மனிதத்தையும் சொல்வதுபோல் கசாப்புக்கடைக்கு வந்த ஒரு காளையை ஊரே துரத்துவதுபோல் ஒரு காட்சி வரும். அப்படி வாடிவாசல் நாவலை அடித்தளமாக வைத்துக்கொண்டு வெற்றிமாறன் பொலி காளைகளை அடிமாட்டிற்கு விற்கும் அரசியலைக் கையில் எடுக்கும்விதம், மெரினா புரட்சியையும் இதில் சேர்ப்பாரா என்ற ஊகத்தையெல்லாம் கிளப்பும்விதம் ஃபேன்மேட் டீஸர் இருந்தன. அதேமாதிரி சூர்யாவோட படங்கள் என்றாலே நடப்பு அரசியலைப் பேசும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கதால படம் ஹிட் என்பது சினிமா பச்சிகள் சொல்லும் ஆரூடம்.“ஜல்லிக்கட்டுன்னா விளையாட்டுன்னு நினைச்சியா அது ஒரு வாழ்க்கைடா” என்ற வசனத்தோடு டீஸர் முடிகிறது.

ஃபேன்மேட் போஸ்டர்கள்

நாவலைப் படமாக்கும்பொழுது வெற்றிமாறன் முக்கியப் பாத்திரத்திற்கு வளு சேர்க்கும்விதம் மாற்றி எடுப்பார். உதாரணத்துக்கு சொல்லனும்னா அசுரன் படத்துல வந்த சிதம்பரம்தான் நாவலில் அதிக முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் ஆனா தனுஷுக்கு ஏத்தமாதிரி சிவசாமி கதாபாத்திரத்த கதையோட்டம் பாதிக்காம மாத்தியிருப்பார். அதேமாதிரி வாடிவாசல்ல பிச்சிதான் முக்கிய பாத்திரம். ஆனா வெற்றிமாறன் அப்பா கதாபாத்திரமான அம்புலிக்கு ஒரு அழகான, ஆழமான திரைக்கதை எழுதுவார்னு எதிர்பார்க்கப்படுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here