கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அண்ணாத்த ஆடுறார்’ பாடலுக்கு அசத்தல் நடனம் போட்ட நடிகர் அஸ்வினை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

டிரெட்மிலில் நடனம்

1989ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் அபூர்வ சகோதரர்கள். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ என்ற பாடல் மிகவும் பிரபலம். இந்த பாடலுக்கு கமல்ஹாசனின் தீவிர ரசிகரும், நடிகருமான அஸ்வின் குமார், ட்ரெட்மில்லில் நடனமாடியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிரெட்மில் கருவியில் உடற்பயிற்சி செய்வதே கடினம் என்கிற நிலையில், அதில் நடனமாடி அசத்தியுள்ளார் அஸ்வின் குமார்.

அசத்தல் நடனம்

இதில் ரொம்பவே ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், டிரெட்மில்லில் பயிற்சி செய்வதே கடினமான ஒன்று, அதில் இவர் எப்படி ஆடி இருப்பார் என்பதுதான். அதுவும் கமல்ஹாசன் ஆடுவது போல அச்சுப்பிசகாமல் அப்படியே நடனமாடி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், கமல்ஹாசனையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கமல் பாராட்டு

அஸ்வின் குமார் தான் நடனமாடிய அந்தப்பாடலை டுவிட்டரில் கமல்ஹாசனுக்கு ஷேர் செய்ய, அதை பார்த்த கமல்ஹாசன், அஸ்வின் குமாரை புகழ்ந்து தள்ளியதோடு மட்டுமல்லாமல், அவரது டுவிட்டர் பக்கத்தில் பதில் டுவிட் செய்துள்ளார். அதில், நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை!எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here