நடிகைகள் பலர் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த இளம் நடிகையும் கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.

வலைதளத்தில் நடிகைகள்

சினிமாவில் தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொள்வதற்காக பலர் பல வழிமுறைகளை கையாண்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளம் மூலம் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிடுவதில் நடிகைகள் அதிக கவனம் செலுத்துகின்றனர். இந்தி நடிகைகள்தான் கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் பகிர்வதில் தீவிரமாக உள்ளனர். அவர்களை பின்பற்றி தற்போது தென்னிந்திய நடிகைகளும் மார்க்கெட்டை தக்க வைக்க கவர்ச்சிக்கு மாறுகின்றனர்.

புகைப்படங்கள்

மீரா மிதுன், சாக்ஷி அகர்வால், ஷாலு ஷம்மு, சஞ்சனா சிங், ரேஷ்மா பசுபுலேட்டி உள்ளிட்ட நடிகைகள், சமூக வலைதளத்தில் தங்களது கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்து வந்த அனு இம்மானுவேலும் இணைந்துள்ளார்.

கவர்ச்சியில் களமிறங்கிய நடிகை

தமிழில் விஷாலின் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படங்களில் நடித்தவர் அனு இம்மானுவேல். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த அவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் குடும்ப பாங்கான தோற்றத்தில் இருப்பது போன்ற படங்களையே வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் திடீரென அரை குறை ஆடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அவரை வர்ணித்து கருத்து பதிவிடுகின்றனர். மேலும் பட வாய்ப்பை பிடிப்பதற்காக அனு இம்மானுவேல் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here