அபிஷேக் பச்சன், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள புதிய வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது.

வெப் சீரிஸ்

2020ஆம் ஆண்டு ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் தொடர்களின் பட்டியலில் ப்ரீத் சீசன் 2வும் ஒன்றாகும். மாதவன் நடித்து அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான ‘ப்ரீத்’ முதல் சீசனில், சுவாரஸ்யம் மற்றும் சஸ்பென்ஸூடன் மூன்று பேரை அடுத்தடுத்து கொலை செய்யும் கதையை அடிப்படையாகக் கொண்டது. கடந்த பிப்ரவரியில் வெளியான ‘ப்ரீத்’ சீசன் 1 குறுகிய காலத்திலேயே 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி அடைந்தது.

‘ப்ரீத் இன் டூ தி ஷேடோஸ்’

வெப் சீரிஸில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் அறிமுகமாகும் ப்ரீத் சீசன் 2 வருகிற ஜூலை மாதம் 10ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸ்க்கு ‘ப்ரீத் இன் டூ தி ஷேடோஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் வகையை சேர்ந்த இத்தொடரை, அபுன்டான்டியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

ரசிகர்களை கவரும்

இதுகுறித்து அமேசான் ப்ரைமின் இந்தியத் தலைவர் அபர்ணா புரோஹித் கூறியுள்ளதாவது: அபிஷேக் பச்சன், நித்யா மேனன் நடித்துள்ள ‘ப்ரீத் இன் டூ தி ஷேடோஸ்’ என்ற புதிய தொடரை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். உலகம் முழுவதுமுள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சீட்டின் நுனியில் அமரவைக்கும் அளவிற்கு இந்த த்ரில்லர் தொடர் மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளார். அபிஷேக் பச்சன் ப்ரீத் சீசன் 2வில் தன் நடிப்பால் அனைத்து ரசிகர்களை ஈர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை எனவும் ப்ரீத் சீசன் 2 அதன் நடிகர்களின் முக்கிய வேடங்களை கொண்டு வெற்றியை தக்க வைத்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here