அரசியலில் கவனம் செலுத்தி வரும் நடிகை ரோஜா நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வில்லியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகை

1990களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரோஜா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களிலும் அவர் நடித்து வந்தார். 2002ம் ஆண்டு இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை திருமணம் செய்துகொண்ட ரோஜா, அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டார்.

அரசியல்

பின்னர் அரசியலில் களமிறங்கிய ரோஜா, 2014ம் ஆண்டு முதல் ஆந்திராவின் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார். 2014 தேர்தல் வெற்றிக்கு பிறகு, 2019திலும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் சினிமா?

இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து நடிகை ரோஜா, மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக தெலுங்கு மீடியாக்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது. அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகவுள்ள ‘புஷ்பா’ என்ற படத்தில்தான் வில்லியாக ரோஜா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

செம்மரக் கடத்தல்

இயக்குனர் சுகுமார் சமீபத்தில் ரோஜாவுக்கு கதை கூறியதாகவும், அதில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் ரோஜா நடிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளி வரவில்லை. செம்மரக் கடத்தை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக கூறப்படும் ‘புஷ்பா’ படத்தில், அல்லு அர்ஜூன் லாரி டிரைவராக நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here