கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பற்றி தற்போது கசிந்துள்ள தகவல் கோடம்பாக்கத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

நயன்தாரா, பிரபுதேவா காதல்

நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகை சேர்ந்த சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா மீதிருந்த அளவு கடந்த அன்பினால் அவருடைய பெயரை தன்னுடைய கையில் பச்சை குத்தி கொண்டார் நயன்தாரா. மேலும், இவர் மதம் மாறி பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டதாகவும் சில தகவல்கள் வெளியாகின. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தது நாம் அனைவருமே அறிந்ததுதான்.

விக்னேஷ் சிவன் என்ட்ரி

தற்போது, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 வருடத்திற்கு மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் நயன்தாரா. இந்த வருடம் இவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் ஜோடி

இந்நிலையில், பிரபுதேவா இயக்கத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடித்துவந்த திரைப்படம் ‘கருப்புராஜா வெள்ளைராஜா’. கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் பாதியிலேயே நின்றுபோனது. இந்நிலையில், இப்படத்தை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் பிரபுதேவா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இதில் விஷாலுக்கு பதில் வேறொரு நடிகரை வைத்து படமெடுக்கப் போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here